Penbugs
Politics

மேற்கு வங்க முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றார் மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை பெற்றது.

மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது.

66 வயதாகும் மம்தா, காலில் காயமடைந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மம்தா,

கொல்கத்தாவில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார்.

மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Related posts

Banning apps not enough, need to give befitting reply to China: WB CM Mamata Banerjee

Penbugs

Leave a Comment