Penbugs
CricketMen Cricket

Memories: 2007 உலக கோப்பை…!

2007 ஐம்பது ஓவர் உலக கோப்பையின் தோல்வி கொடுத்த அதிர்ச்சி இந்திய கிரிக்கெட் வரலாற்றை புரட்டி போட்ட ஒன்று அதன் பிறகு இந்தியாவில் கிரிக்கெட் வீழ்ந்து விடும் என்று அனைவரும் ஆருடம் சொல்லிக் கொண்டுருக்கும்போது தோனியின் தலைமையில் இருபது ஓவர் உலககோப்பைக்கான அணி அறிவிக்கப்படட்டது .பெரிதும் எதிர்பார்த்த ஐம்பது ஓவரே அதுவும் ஜாம்பவான்கள் இருந்த அணியே தோற்றப்போனது அந்த காலகட்டத்தில் பெரிதும் இருபது ஓவர் ஆடாத அணியாக வேற போட்டியில் பங்கு கொள்ள சென்றது என அதிகம் எதிர்பார்ப்பு இல்லாத அணியாக இருந்தது.

இந்தியா ஆடிய முதல் போட்டியில் பவுல் அவுட் முறையில் அசத்தல் வெற்றியுடன் முதல் வெற்றியை துவங்கியது அதன் பிறகு ஒவ்வொரு போட்டியிலும் விதவிதமான புதிய அனுபவங்கள் சூப்பர் 8 பிரிவில் நியூசிலாந்து அணியுடன் தோல்வி , அடுத்த போட்டியில் யுவராஜ்சிங்கின் ஆறு சிக்ஸர்கள் , தெ‌.ஆப்ரிக்காவுடன் தினேஷ் கார்த்திக்கின் கேட்ச் என்று ஆரவாரமான ஒரு தொடராக மாறியது நெட் ரன்ரேட் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதி சென்றபோது அங்கு எதிர்கொண்டது வலிமை வாய்ந்த ஆஸ்திரேலிய அணி இவ்வளவு வந்ததே பெரிது என்றென்னி அரையிறுதி போட்டியை அரை மனதோடு காண அமரந்தால் ரிக்கி பாண்டிங் அந்த போட்டியில் ஓய்வு என்ற அறிவிப்பு இவ்ளோ தைரியமாக களம் இறக்கும் ஆஸி அணியின் முன்னால் இந்திய அணி லாவகமாக விளையாடியது என்றே கூறலாம் ‌யுவராஜ்சிங் , உத்தப்பா ,தோனியின் அதிரடியில் பேட்டிங்கில் ஜொலித்தது வலிமை வாய்ந்த ஆஸியின் பேட்டிங்கை தகர்க்க ஸ்ரீசாந்த்தின் அட்டகாசமான பவுலிங் கைகொடுத்தது நான்கு ஓவரில் வெறும் பன்னிரென்டு ரன் தந்து இரண்டு விக்கெட்டுகள் அதிலும் ஹைடன் விக்கெட் எடுத்து அசத்தினார்…!

ஹைடன் விக்கெட்டிற்கான ஸ்ரீசாந்தின் கொண்டாட்டமும் , கிளார்க் விக்கெட் எடுத்தபின் தோனி ஹர்பஜனிடம் காட்டும் அல்டிமேட் ரியாக்சனும் இன்றுவரை டாப் டென் கிரிக்கெட் நினைவுகளில் ஒன்று …!

இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ..!

இந்தியா பாகிஸ்தான் போட்டி வெறும் போட்டியை கடந்து அரசியல் நிலைப்பாடுகளால் இரு நாட்டின் கௌரவ பிரச்சினையாக காணும் அளவிற்கான பரபரப்பு முதலிலயே தொற்றி கொண்டது இந்திய அணி முதல் பேட்டிங்கில் கம்பீரின் உதவியால் போரடதகுந்த ஸ்கோரை எட்டியது. பந்து வீச்சில் இந்தியாவின் ஸ்விங் மன்னனான இர்பான் பதான் சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களில் பதினாறு ரன் மட்டும் தந்து மூன்று விக்கெட்டுகளையும் எடுத்து தந்தார்…!

போட்டியின் இறுதிக்கட்டத்தில் மிஸ்பா உல் ஹக்கின் அதிரடி யாரும் எதிர்பார்க்காத ஒன்று என்ன இது ஆட்டம் திரும்பியதே என்ற வருத்தம் இருக்கும்போது இறுதி ஓவரை ஜோகிந்தர்சர்மாவை அழைத்து தந்நதார் தோனி இது மிகவும் தவறான விசயமாக மாற போகும் என்ற எண்ணியபோது அது ஆட்டத்தின் முடிவை மாற்றி இந்தியா முதல் இருபது ஓவர் உலககோப்பையை ஜெயிக்க காரணமாக அமைந்தது ‌‌…!

ஏன் 2007 உலககோப்பை எப்போழுதும் ஸ்பெஷல்…?

* தோனி என்ற தலைசிறந்த தலைவனை அடையாளம் கண்ட தொடர்.

* இருபது ஓவர் போட்டி இந்தியாவில் டிரெண்ட் ஆக முக்கிய காரணமாக இருந்தது அதனை வைத்து தொடங்கப்பட்ட ஐபிஎல் இன்று உலகின் மிகச் சிறந்த தொடர்களில் ஒன்று .

* யுவராஜ்சிங்கின் ஆறு சிக்சர்கள்

* ஸ்ரீசாந்தின் கொண்டாட்டங்கள்

* கம்பீரின் கட்டுகோப்பான ஆட்டமுறை

என 90ஸ் கிட்ஸின் டைரியில் நிச்சயமாக மறக்க முடியாத இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான பொன் நாள் இன்று …!

Related posts

World Cup 2022: Healy’s ton take Australia to final

Penbugs

Women’s World Cup 2022: Team South Africa Preview

Kalyani Mane

Women’s World Cup 2022: Team England Preview

Penbugs

Women’s World Cup 2022: Australia Preview

Penbugs

Women’s T20I rankings: Shafali Verma dethrones Suzie Bates, becomes no.1 batter!

Penbugs

Who would have thought? – The story of Tigers

Thiruvikraman

West Indies name squad for World Cup

Penbugs

Watch: Jemimah Rodrigues shows off her dance skills with an off-duty security guard

Penbugs

Time for Kate Cross-The Cricketer to take over

Penbugs

Throwback: Enid Bakewell remembers first World Cup

Penbugs

There are few World Cups to be won: Rohit Sharma

Gomesh Shanmugavelayutham

The Leverock wonder!

Penbugs