Penbugs
Cinema Inspiring

யுவனே சரணம்..!

ரொம்ப நாட்களா என்ன நானே
கேட்குற ஒரு கேள்வினா அது
இது தான் இது மட்டும் தான் Who am I..?

இது நான் மட்டும் இல்ல
என்ன மாதிரி பல பேரு
தங்களுக்குள்ள தினமும் கேட்குற
கேள்வி தான் ஆனா அந்த கேள்விக்கான
பதில் இன்னும் யாருக்கு சரியா
கிடைக்கலன்னு தான் சொல்லணும்,

தோல்விகள்,நிராகரிப்புகள்,
ஏமாற்றங்கள் இப்படி பல தரப்பட்ட
கோணங்களில் ஒவ்வொருத்தரின்
கனவும் கலைந்து இருக்கும் அப்படி
ஏதோ ஒரு தருணத்தில் அவர்கள்
நிலை தடுமாறும் போது தான்
அவர்கள் தன்னைத்தானே ” Who am I “
என்று தங்களிடமே கேள்வி கேட்டு
கொள்கின்றனர்,

விலங்கின திணையுடைய
மண்புழு கூட தாவர கழிவுகளை
உணவாக உண்டு அதனால் தன் உடலில்
இருந்து வெளிவரும் செரிமானக் கழிவால்
தான் வாழும் மண்ணை வளமாக வைக்க
உதவி செய்து ஏதோ ஒரு விதத்தில் பயிரை
பயிரிடும் உழவனுக்கு நண்பனாக
இருக்கின்றது,

ஒரு மண்புழு கூட தன் நிலையை
உயர்த்திக்கொள்ளும்போது ஒரு மனித
உயிரான நான் என்னை சுற்றி நடக்கும்
பிரிவு,இழப்பு,ஏமாற்றம்,தோல்வி,
நிராகரிப்பு இவற்றை எல்லாம் கடந்து
வானமே எல்லை என மனதில் திடமா
நினைத்துக்கொண்டு என் சாலைகளில் பயணம் செய்து தானே ஆக வேண்டும்,
அப்படி ஒரு பயணம் நான் மேற்கொண்டால்
மட்டுமே என்னை மிஞ்சிய ஒரு சாதனையை
என்னால் செய்ய முடியும்ன்னு நான் இங்க
நம்புறேன்,

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான
கவலைகள் என்னை சூழ்ந்துகொண்டும்
தொடர்ந்து கொண்டும் தான் இருக்கிறது,
எல்லாவற்றையும் எல்லா இடங்களில் பேச
முடியாதல்லவா அப்படி தான்,

ஆனால் என் சாதனை செய்ய நான்
என்னை ஊக்கப்படுத்திக்கொள்கிறேன்
இங்கு,

இப்படி கவலைகள் ஒரு புறம்
பெரிய பங்கு வகிக்கும்போதெல்லாம்
எனக்கு வலி நிவாரணியாய் இருக்கும்
என் இசை மருத்துவன் சொன்னது தான்
ஒவ்வொரு முறையும் மனதில் வந்து
போகும்,

நான் ஒரு ஃபிளாப் மியூசிக் டைரக்டர்
எனக்கு கொஞ்ச வருஷமா படமே வரல,
ஃபிளாப் மியூசிக் டைரக்டர்ன்னு எனக்கு
முத்திரை குத்திட்டாங்க,இவர் மியூசிக்
பண்ணுனா அந்த படம் கண்டிப்பா
ஓடாதுன்னு ஒரு பேச்சு கோலிவுட்
வட்டாரத்துல ரொம்பவே அதிகமா
பேசப்பட்டுச்சு, ரொம்ப வருஷம் கழிச்சு
என்னோட ஹிட் ஆல்பம்ன்னா அது
“தீனா” தான், இப்படி அவர் சொன்னப்போ
தான் புரிஞ்சது லக் ன்ற ஒரு விஷயம் கூட
இங்க ரொம்ப முக்கிய பங்கு வகிக்குது
நம்ம வெற்றிகள் மற்றும் சாதனைகள்ன்னு
வரும்போது,

எதிர்நீச்சல் படத்துல கூட ஒரு டயலாக்
வரும் அது ரொம்பவே எனக்கு பெர்சனல்
கனெக்ட்ன்னு சொல்லலாம்,

இந்த உலகத்துல
லக்,அதிர்ஷ்டம் எல்லாமே பொய்
நமக்கு நடக்குற வரைக்கும்,

என்ன தான் திறமை இருந்தாலும்
லக்ன்னு ஒன்னு இருந்தா தான் சார்
சச்சினே 99 ல இருக்க ரன்ன செஞ்சுரிக்கு
கன்வெர்ட் பண்ண முடியும்,

ஆனா லக் – ன்ற விஷயத்த நாம தேடி
போகமுடியாது,தங்களோட வேலைய மட்டும்
இங்க செஞ்சுட்டே இருப்போம் சரியான
பாதையில ஆட்டோமேட்டிக்கா எப்போவாது
நம்ம பக்கமா காத்து வீசும்,அதை தான்
யுவனும் செஞ்சார் தன்ன ஃபிளாப் மியூசிக்
டைரக்டர்ன்னு சொன்னப்போ,ஆனா
இன்னக்கி ஒரு டாப் நடிகர்களுக்கு
உண்டான ஒரு ஃபேன் பேஸ் இருக்கு
அவருக்கு,பல ஹீரோக்களின் ரசிகர்கள்
திரையின் முன் வரும்போது இவரின்
பின்னணி இசை தான் அந்த காட்சிக்கு
மேலும் வலு சேர்க்கிறது,அவரோட
பாடல்களுக்கு பல முகம் இங்க இருக்கு
அதே நேரத்துல,

ராஜா இல்லாத சங்கீதமான்ற வரிகள்
அவங்க அப்பாவ போலவே இவருக்கும்
செட் ஆகும்,

உங்களுக்கான எந்த ஒரு தொடர்பியல்
சூழ்நிலைகளுக்கும் இவர் பாடல்கள் தகுந்த
இடம் பிடிக்கும் அதன் சந்தர்ப்பத்திற்கேற்ப,

சந்தோஷம்,துக்கம்,வலி ன்னு
எல்லா இடங்களிலும் அவரோட பாடல்கள்
என்ன போல நிறைய பேருக்கு இங்க ஒரு
உந்துதலா இருக்கு,

பறவையே எங்கு இருக்கிறாய்ன்னு
பயணத்துல ஆரம்பிச்சு துளி துளி துளி
மழையாய் வந்தாலேன்னு காதலில்
திளைத்து போகாதேன்னு பிரிவுகள
சந்திச்சு,மேடை ஏறி வாரோம்ன்னு கச்சேரி
செய்து,நட்புக்குள்ளே ஒரு பிரிவுன்னு
சண்டை போட்டுக்கிட்டு,தந்தையின் ஆனந்த யாழை மீட்டிவிட்டு,தாயின்
ஆராரிராரோவில் தாலாட்டு பாடி,
நெஞ்சோடு கலந்திடு என ஒரு ஜீவன்
தன்னை அன்பில் அரவணைத்து,
உனக்குள்ளே மிருகம் என துரோகங்களை
கடந்து வந்து, என பல விதமான
தாக்கங்கள் பல விதமான
மனநிலைக்கேற்ப இவர் தன் இசையின்
மூலம் தன் ரசிகனுக்கு வழிப்போக்கனாக
தான் இருந்து வருகிறார்,

யாரும் காணாத உலகத்தை
தன் இசையின் மூலம் கடத்தி அங்கே
நமக்கு ஒரு இடம் கொடுத்து அங்கு
நமக்கான கவலைகளுக்கு தகுந்த மருந்தை
அளித்துக்கொண்டிருக்கிறார் என்று தான்
சொல்ல வேண்டும்,

என் சிரிப்புக்கு சொந்தக்காரர்
என் அழுகைக்கு சொந்தக்காரர்
என் பேரன்புக்கு சொந்தக்காரர்
என் எல்லாமுமாக இசையாய் இருப்பவர்,

ஏதோ ஒரு சாதனை நான் செஞ்சா தான்
இந்த உலகம் என்ன திரும்பி பார்க்கும்
அப்படி நான் சாதிக்கலேனா என்ன கால்ல
போட்டு மிதிச்சு என் மேல ஏறி போய்கிட்டே
இருக்கும் இந்த உலகம்,அப்போ நான்
சாதிக்கணும்ன்னு என்ன நானே கேள்வி
கேட்டு என்ன உணர்ந்து சரியான
பாதையில நான் செல்லுறப்போ மனசு
” Who am I ” – ன்னு கேள்வி கேக்குது,
அப்படி கேள்வி கேக்குறப்போ இவர் தான்
என்னோட ஆறுதலா துணையா இருக்கார்,

காயங்களை கட்டிக்கொண்டு
உன்னிடம் வந்துவிட்டேன்
என் பாவம் யாவும் தூயவனே
என்றோ மறந்துவிட்டேன்

  • நா.முத்துக்குமார் | தரமணி

கடைசியா திரும்பவும் சொல்லுறேன்
இசை ஒரு மனுஷனோட மனநிலைய எப்படி
வேணும்னாலும் மாத்தும்,Mood Swing – ன்றது
நிறைய பேருக்கு இங்க இருக்க பெரிய
பிரச்சனை,அப்படி ஒரு தூய இசைய
இங்க இசை தூயவன் ஒருத்தர் நமக்கு
கொடுக்கும்போது அது தான் இங்க
நமக்கான காரணியா தேவைப்படுது
ஒவ்வொருத்தருக்கும்,

ஜனித்த நாள் வாழ்த்துக்கள்
என் பேரன்பின் இசை மொழிக்கு..!!

HappyBirthdayYuvanShankarRaja | #MusictheLifeGiver ❤️

Image Courtesy: Viyaki Designs

Related posts

Leave a Comment