அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
படத்தை இயக்குநர் சிவா இயக்கியுள்ளார்.
சிவாவின் ஆஸ்தான கேமராமேன் வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.
இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.
இன்று காலை 11 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டரும், மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டரும் வெளியானது.