Penbugs
Cinema Inspiring

ஜீவன் போற்றும் குரல்

என்றோ ஓர் நாள் இழப்பு என்பது
வாழ்வில் வந்து தான் ஆக வேண்டும்
என்று தெரிந்து தான் எல்லோரும்
தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து
கொண்டிருக்கிறோம், இந்த வாழ்க்கை
என்பது நிலையானது அல்ல முடிந்த வரை
பிறரிடம் அன்போடு இருந்து நாம் இறக்கும்
நாளில் நான்கு பேரின் கண்ணீரை
பெற்றுவிட்டால் நம் இறப்பு மோட்சம்
அடைந்து விடும் என்பது தான் அனைவரும்
வேண்டுவது,

இந்த 2020- ல் பல துயர் மிகு
சம்பவங்களை நாம் ஒவ்வொரு நாளும்
பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும்
அதில் தங்களை இணைத்து வாழ்ந்து
கொண்டிருக்கும் தருவாயில் இதோ
இன்று அடுத்த இழப்பு, பாடகர் திரு.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமாகி
இருக்கிறார்,

பல ரக பாடல்களுக்கு ஜீவன்
கொடுத்த ஒரு குரல் இவருடையது,
எம்.ஜீ.ஆர்,கமல்,ரஜினி,அஜித்,விஜய்
மற்றும் பல இளம் நடிகர்கள் என அவரின்
குரல் இன்று மட்டுமில்லை வருங்காலத்தில்
என்றும் தொலைக்காட்சியிலும் ரேடியோ
பெட்டியிலும் ஒலித்துக்கொண்டு தான்
இருக்கப்போகிறது அதில் எந்த வித
மாற்றுக்கருத்தும் இல்லை,

வாழும் சகாப்தம் இப்போது வாழ்ந்த
சகாப்தம் என்ற உயரிய நிலைக்கு
சென்றிருக்கிறார்,தன்னால் முடிந்த வரை
தன் குரல் மூலம் குடிசையில் வாழும் ஏழை
முதல் மாடமாளிகையில் வாழும்
பணக்காரன் வரை ஒவ்வொருவரின்
இரவுகளுக்கும் தன் குரலினால் ஓர்
பேரன்பு தாக்கத்தை கொடுத்து விட்டு
சென்றிருக்கிறார்,

உலகின் கடைசி தமிழன் கார்
ஓட்டும் வரை ராஜா பாடல்கள் எப்படி
உயிருடன் இருக்குமோ அந்த ராஜா
பாடல்களின் முன்னோடியாய் எஸ்.பி. பீ
நிச்சயமாய் இருப்பார்,

பல இசை அமைப்பாளர்களுடன்
பணியாற்றியிருந்தாலும்
இளையராஜா,ரஹ்மான் இருவரும்
இவர் குரலுக்கு சரியான தீணி போடும்
பாடல்களை கொடுத்து அவர் எனர்ஜி
லெவெலுக்கு மீண்டும்
உயிர்கொடுத்துக்கொண்டே இருந்தனர்,

தூக்கமின்றி தவித்த பல இரவுகளில் ஒரு
தந்தை போல் தன் குரலின் தாலாட்டினால்
பல மக்களை இங்கு தன் குரல் மூலம்
அரவணைத்து இருக்கிறார் என்பதே இங்கு
அவரின் இறப்பை தாங்கமுடியாத ரசிகர்கள்
மனம் நொந்து இருப்பது தான் இதற்கு
முக்கிய சான்று,

கண்களை நீ மூடிகொண்டாய் நான்
குலுங்கி குலுங்கி அழுதேன் – ன்னு நீங்க
பாடுனது தான் இப்போ எங்க எல்லாரையும்
சோக கடலில் மூழ்க செய்துருக்குன்னு
சொல்லலாம்,

தன் மாய குரலில் அனைவரின் மனதையும்
வருடிய இவர் நடிப்பிலும் தனது Humour
காமெடியில் நம்மை ரசிக்க வைத்து
இருக்கிறார் அதிலும் அவ்வை சண்முகி
டாக்டர் வேடம் மற்றும் கேளடி கண்மணியில்
உணர்வுகளை வெளிப்படும் கதாபாத்திரம்
மின்சார கனவு படத்தில் எதார்த்தனமான
கதாபாத்திரம் என நடிப்பிலும் வெவ்வேறு
களங்களில் நடித்து மக்களிடம் பாராட்டை
பெற்றவர்,

ஒரு பயணத்தின் போது ஐம்பது
பாடல்கள் கேட்கும் பட்சத்தில் அதில்
பத்து பாடல்களாவது உங்கள் பாடல்
ட்ராக் லிஸ்ட்டில் நிச்சயம் ஒலிக்கும்
அந்த அளவிற்கு எந்த ஒரு நிகழ்வுக்கும்
உங்கள் குரலில் பாடல்களை நீங்கள்
கொடுத்து சென்ற விதம் தான் இதற்கு
காரணம்,

இசைக்கு மொழி இல்லை
குரலுக்கு வடிவம் இல்லை
உங்கள் குரல் தான் எங்களின் மன
அமைதிக்கு வெளிச்சமாய் இருக்கிறது
நீங்கள் இப்பொழுது இல்லை என்றாலும்
உங்கள் குரல் எங்களின் தலைமுறை
கடந்தும் தொடரும் அதற்கான
விதையையும் நீங்கள் போட்டு விட்டு
சென்றுள்ளீர்கள்,

உங்கள் தேகம் மறைந்தாலும் உங்கள் குரல்
வழியே எங்களை உங்களுடன் இணைத்து
கொண்டு தானே இருக்கப்போகிறீர்கள்,

உங்கள் குரல் ஒலிக்கட்டும்
ஆத்மா சாந்தி அடையட்டும்..!!

Related posts

‘Bad Boy’ from Saaho

Penbugs

1st look poster of Viduthalai starring Soori, Vijay Sethupathi is out

Penbugs

Australian superstars: Karen Rolton

Penbugs

Actor Danny Masterson charged with rapes of three women

Penbugs

SAG Awards 2020: The Complete Winners List

Penbugs

Master 1st single: Oru Kutti Kadhai is here!

Penbugs

‘Bess is no wonder bowler’

Penbugs

My vulnerability and sensitivity are my biggest strengths: Aditi Rao Hydari

Penbugs

Varane Avashyamund (Groom Wanted) Movie Review

Shiva Chelliah

Dear Chinmayi Akka…

Penbugs

“பாடும் நிலா எஸ்பி பாலசுப்பிரமணியம் “

Kesavan Madumathy

Teaser of Soorarai Pottru is here!

Penbugs

Leave a Comment