Penbugs
CoronavirusEditorial News

மே 15-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரூ 2000 நிவாரணம்

மே 15-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகையின் முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதல் கோப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்குதல் ஆகும்.

தேர்தல் வாக்குறுதியில் ரூ 4000 அறிவித்துள்ள நிலையில் முதல் தவணையாக ரூ 2000 வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தற்போது ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் டோக்கன் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் வரும் மே 15 முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Related posts

ஜீன் 15 முதல் மளிகைப் பொருள் தொகுப்பும் , நிவாரண தொகையும் வழங்கப்படும் – தமிழக அரசு

Kesavan Madumathy

அக்டோபர் 1-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அமல்

Penbugs

5ம் தேதி முதல் இலவச முகக்கவசம் அளிக்கப்படும் – அமைச்சர் காமராஜ்

Penbugs

Leave a Comment