Penbugs
CinemaPolitics

ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு – நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

கடந்த 2017 ஆம் தேதி அரசியலுக்கு வரப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகர் ரஜினி.

சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என்று அறிவித்த ரஜினிகாந்த், கொரோனா மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு ரஜினி தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார்.

இந்த சூழலில் இன்று நடிகர் ரஜினிகாந்த் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

அதன்பின் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் , என்னை வாழவைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன நிலை என்ன ?என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது .அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.

நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் ஆக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல உதவிகளையும், பல சாதனைகளையும் உருவாக்கினோம்.

காலச் சூழலால் நாம் எண்ணம் சாத்தியப்படவில்லை . வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு சார் பணிகள் எதுவும் இன்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள். இணை. துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் .மக்கள் நலப் பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள்! வாழ்க தமிழ்நாடு! ஜெய்ஹிந்த் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வித்யாசாகர் எனும் சேமிப்பு காதலன்

Shiva Chelliah

மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார் நடிகர் ரஜினிகாந்த்

Penbugs

நாளை எனக்கு இரண்டு முக்கிய நிகழ்வுகள்: நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை

Penbugs

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம்

Penbugs

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு 25ம் தேதி தாதா சாகேப் பால்கே விருது

Penbugs

சத்தியமா விடவே கூடாது – ரஜினிகாந்த்

Kesavan Madumathy

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்

Kesavan Madumathy

என்றுமே ராஜா நீ ரஜினி …!

Kesavan Madumathy

அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

Penbugs

WWE: The Undertaker announces retirement

Penbugs

When Rajinikanth wanted to do the role of ‘Bharathiyar’

Penbugs

Leave a Comment